பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறிஞர் அண்ணா


(சாது பாடியபடி வருகிறார்..பாட்டு முடிந்ததும்)

சாது : அப்பா, பாட்டாளி மக்களே! அண்டசராசரத்தைப் படைத்த ஐயன் உங்களைக் காற்றாற்றுவாராக.

பச்சை : ஐயா, சாமி! நாங்க தீண்டாதவங்க!

ஆண்டி : ஆம்; ஐயா! ஆம்! நாங்க தீண்டாதவர்கள் தான்! ஊரார் சொத்தைத் தீண்டியதில்லை. வஞ்சனையைத் தீண்டியதில்லை. சூது, சூழ்ச்சியை நாங்கள் தீண்டியதில்லை! பாபத்தைத் தீண்டாதவர்கள் நாங்கள்.

சாது : தம்பி! உன் மதி கண்டு மகிழ்கிறேன். மகான் குலமானலும், பிரபு குலமானாலும், ராவ் குலமானாலும், எல்லோரும் மனிதர் குலம். பேதம் ஏது? நீ அறிவாளி.

ஆண்டி : அறிந்ததால் தான் என் அல்லல் அதிகமாகிறது. இதோ பச்சை! யாவும் தெய்வ சம்மதம் என்று நம்புகிறான். அதனால் அவனுக்கு ஜாதி வெறியரின் செயல் ஆத்திரமூட்டவில்லை.

சாது : ஆத்திரமல்ல! அநேக காலமாக இருந்து வந்த அக்ரமத்தைக் கண்டு சத்தியம் கோபிக்கிறது என்று பொருள். நீ சலிப்படையாதே! சமரசக் கீதத்தை இந்தமராட்டியத்திலே பல ஜீவன் முக்தர்கள் பரப்பிக் கொண்டு வருகிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தின் முன்பு, அனைவரும் சமம். சாதி, மதம், உயர்வு தாழ்வெனும் தீது, சமரச ஞான மகான்களுக்கேது என்ற தத்துவம் தழைத்து வருகிறது.

ஆண்டி : ஐயா, சாது! உம்முடைய சமரச ஞானம் அத்தி பூத்தது போல் இருக்கிறது. சேற்றிலே ஒரு செந்தாமரை போல் இருக்கிறீர். ஆனால் என் மேல் கோபிக்காதீர். உம்முடைய முயற்சி உத்தமமானதுதான்; ஆனால் அது பலிக்காது. வேண்டுமானால் உம்மை ஒரு அவதார புருஷர் என்று கொண்டாடுவார்கள்; கோவில்