பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

15


கட்டுவார்கள்; கூத்தாடுவார்கள். ஆனால் எல்லோரும் சமம்; பிறவியிலே உயர்வு தாழ்வு இல்லை என்று பேசுகிறீரே, அதை மட்டும் நடைமுறையிலே கொண்டு வரமாட்டார்கள். நான் பதட்டமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம். ஐயா! காவியும், கமண்டலமும் எங்கள் குலத்தின் கஷ்டத்தைப் போக்காது. முக்திக்கு வழிதரக்கூடும். உங்களுக்குள்ள இழிவைத் துடைக்காது; எங்கள் சமூகத்தை இந்தக் கொடுமை செய்கிறவர்கள் தங்களைக் கடவுள், உயர்ந்த சாதியராகப் படைத்ததாகக் கூறுகிறார்கள். அது கொடுமை. இதோ பச்சை! அதை உண்மைதான் என்கிறான். இது மடமை. இந்த மடமையும், அந்தக் கொடுமையும் ஒழிய வேண்டுமே ஐயா! கீதம் பாடினால் போதுமா?

சாது : அப்பா நெறியற்றவரின் வெறிச் செயலால் நீ மிகவும் வாடியிருக்கிறாய். கடவுளின் லட்சணமும், குணமும், அக் கயவரின் மொழிப்படியல்ல என்பதை அறிந்து கொள். கடவுள் என்றால் மனம், வாக்கு, காயம் என்பனவற்றைக் கடந்தவர் என்று பொருள்.

ஆண்டி : இருக்கலாம் அய்யா! எதையும் கடந்தவராக இருப்பார்.ஆனால் அந்த ஆரியர் போடும் கோட்டினை மட்டும் அவரால் கடக்க முடிவதில்லை. லோகம் மந்ராதீனம், மந்திரம் ப்ராமணாதீனம். ப்ராமணம் தேவதாதீனம். என்பது கீதையல்லவா! கடவுளுக்கே அவர்கள் எஜமானர்களாமே...?

சாது : வெறும் புரட்டு; மமதை; அகம்பாவம்; கடவுள் வாக்கல்ல அது; கபட மொழி.

ஆண்டி : கண்ணன் காட்டிய வழியாமே?

சாது : இல்லை; கயவர் வெட்டிய படுகுழி. அப்பா! மராட்டியத்திலே புதிய சக்தி பிறந்திருக்கிறது. மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரமம்