பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

17


முடியும். எங்களிடம் பொறுமையின் அருமையைப் பற்றி உபதேசிப்பீர். எம்மை மிருகங்களினும் கேவலமாக நடத்தும் கொடியோருக்கு அன்பின் பெருமையைப் பற்றிப் பேசுவீர். இருவரிடமும் மறுமையின் மேன்மையைப் பற்றிப் பேசுவீர். ஆனால் உரிமைப் போருக்கான வழி உரைக்க அறியீர். அது அறிந்திருந்தால் இந்தக் காவியும், கமண்டலமும் கையிலிராது.

(போகிறான்.)

சாது : தம்பி கொஞ்சம் நில்!

(போனவன் திரும்பி வந்து சற்றுக் கோபத்துடன்)

ஆண்டி : ஆமாம்! இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் உமக்கு. மிருகங்களிலே பொறுமையைப் பூஷணமாகக் கொண்ட கழுதையைக் கண்டவர் அடிப்பர். ரோஷத்துடன் உறுமும் புலியிடமோ கிலி கொள்வர். அய்யா! எங்களை பூதேவர்கள் என்ற புரட்டர்கள். தங்கள் ஆகமம் என்னும் அரக்கு மாளிகைக்கு அழைத்துச் சென்று கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டார்கள். தாங்கள் அந்த அரக்கு மாளிகையிலே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கிறீர்கள்! ஆபத்துதான் உண்டாகும் அதனால்... ஐயா... சாது சன்னியாசிக் கூட்டதவராகிய நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். 'சகித்துக் கொள்ளப்பா சமரசம் உதயமாகும் பாரப்பா! சகலரும் சர்வேஸ்வரன் கண்முன் ஒன்றுதானப்பா' என்று உபதேசம் செய்கிறீர்கள். நாட்டு விடுதலைப் போர் வீரர்களோ அடிமைத்தனம் அழிந்து பட்டதும், எதிரி விரட்டப்பட்டதும், சுய ஆட்சி கிடைத்ததும் 'ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் எல்லோரும் ஓர் குலம்' ஒருவரை ஒருவர் தாழ்வாகக் கருதும் மடமையும், கொடுமையும் ஒழிக்கப்படும். உறுதியாக இதை நம்பு' என்று நல்வாக்கு