பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அறிஞர் அண்ணா


கொடுக்கின்றார்கள். உங்கள் உபதேசமும், அவர்கள் உறுதிமொழியும் இதோ இந்தக் கொடுமையைப் போக்கவில்லையே. அய்யா! நாடு விடுதலை பெற்று என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம்? அன்னிய ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம் நாங்கள்? எங்களுடைய இழிவு போகவில்லையே! எங்கள் நிலை உயரவில்லையே. அய்யா!

(போகிறான்.)

காட்சி - 3

இடம் : இந்துமதி வீடு

உறுப்பினர்கள் : இந்துமதி, சந்திரமோகன்,

(மோகன் வர, அவன் கழுத்தில் இந்து மாலை அணிவிக்கிறாள்.)

இந்து : கண்ணாளா இந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த மனவேதனை அவ்வளவும் இந்த ஒரு வினாடியில் ஒழிந்து விட்டது. அப்பப்பா!.. எவ்வளவு பயங்கரமான செய்திகள். போரிலே நமது படை சின்னாபின்னமாகி விட்டது. கோட்டையைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்.... ஆயுதச் சாலையைப் பிடித்துக் கொண்டனர். என்றெல்லாம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் என் நிலை... அடடா!

மோகன் : கலங்கித்தான் போயிருப்பாய் கண்மணி. களத்திலே கடும் போர்தான். ஆபத்துக்கள் நிறைய உண்டு. ஆனால் ஆற்றல் மிக்க நமது தலைவர் அளித்த தைரியம். எங்களுடைய பலத்தை பல மடங்கு அதிகமாக்கிற்று.

கண்ணே உன் காதலனும் கோழையல்ல; உன்னைக் கண்டதும் என் விழியிலே கனிவு வழியும். அதைக் கண்டு இந்தக் கண்களுக்கு இதுதான் இயல்பு என்று