பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அறிஞர் அண்ணா


மோகன் : என்மொழி உன்னை பைத்தியமாக்குவதாகச் சொல்கிறாய். இன்பவல்லி! உன் விழி என்னைப் பைத்தியமாக்கிவிடுகிறதே.

இந்து : போதும் போங்கள்! உங்களுக்கு எப்போதும் கேலிதானா?

காட்சி - 4

இடம் : வீதி

உறுப்பினர்கள் : சந்திரமோகன், சாது.

(சாது நாட்டைப் பற்றி பாடி வருகிறார். மோகன் அதைக் கேட்டு விட்டு...)

மோகன் : பெரியவரே! களிப்புக் கடலில் மூழ்கினேன். உமது கீதத்தைக் கேட்டு...

சாது : இனிமையாக இருந்ததா தம்பி?

மோகன் : மதுரமாக இருந்தது மதிவாணரே!

சாது : இதைவிட இனிமை உண்டு, வானத்திலே வட்டமிடும் வானம்பாடியின் கீதத்தைக் கேட்டால். உற்றுக் கேட்டால் வீரனே! சிற்றருவிப் பாய்ந்தோடும் போது இனிமையான கானம் கேட்கவில்லையா? இயற்கை சதா நேரமும் இசைபாடிக் கொண்டுதான் இருக்கிறது.

மோகன்: உண்மைதான் பெரியவரே.

சாது : குழந்தையின் மழலை, குமரியின் கொஞ்சுமொழி, தென்றலிலே படும் கொடிகளின் அசைவு - இவைகளிலே இல்லாத இனிமை என் இசையிலே ஏதப்பா?

மோகன் : அய்யா இனிமை மட்டுமே அந்தச் சமயங்களிலே காண்கிறேன். ஆனால், தங்கள் இசையிலேயோ இனிமையுடன் பொருளும் இருக்கக்கண்டு களித்தேன்.