பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிஞர் அண்ணா


மராட்டிய வீரர்களை ஒன்றாக்கி வைக்கிறது. பாசமும் பயமும் வெற்றிக் கொடி பறந்ததும், பறந்தே போய்விடும். பழையபடி ஜாதி தலைதூக்கும்! அதை எண்ணித்தான் நான் சஞ்சலப்படுகிறேன்.

மோகன் : நாட்டு மக்களுக்கு ஜாதி கேட்டினைத்தான் செய்யும். அந்தக் கேட்டினை நாட்டை விட்டு ஒட்டிடலாம். அய்யா ரத, கஜ துரக பதாதிகளையா கூட்டி வரும் இந்த ஜாதி?

சாது : அதற்கேனப்பா நால்வகைச் சேனை? அந்த ஜாதி சனியனால் தகப்பனே மகனுக்கு விரோதியாக்க முடியும். அண்ணனும் தம்பியும் போரிட்டு மடிவர், அது தூபமிட்டால், குடும்பம் கொலைக்களமாகும். ஊர் இரண்டு படும்! அது தூபமிட்டால், அந்த ஜாதித் சனியனுக்கு கோட்டைகள், மலைகள், மீதியிருந்தால் மாவீரர்கள் சென்று தாக்கித் தகர்த்துவிட முடியும். அந்த ஜாதிச் சனியனுக்குக் கோட்டைகள் நம்மவர் மனதிலேயே இருக்கின்றன.

மோகன் : பெரியவரே! இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். புதிய ராஜ்யம் ஏற்படுகிறது. புனிதப் போருக்குப் பிறகு ஏற்படும் ராஜ்யம் இது. இதிலே புல்லர்களுக்கு ஆதிக்கம் இருக்காது. ஒற்றுமை நிலவும்; தோழமை மலரும்; சமரச மணம் வீசும்; சன்மார்க்கம் நிலைக்கும்; ஜாதி மடியும்.

சாது : நல்வாக்குக் கொடுக்கிறாய், நாடாள நீயே வந்தாலும் நடவாக் காரியங்களை மடமடவெனக் கொட்டிக் காட்டுகிறாய் ஆர்வ மிகுதியால்... நீயே நாளைக்கு ராஜா ஆகிவிடுகிறாய் என்று வைத்துக் கொள்.

(மோகன் திகைத்துப் பார்க்க)

ஏனப்பா அப்படிப் பார்க்கிறாய்? அவலட்சணங்களெல்லாம் அரசர்களானபோது நீ ராஜா ஆகவா முடியாது? ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான்