பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அறிஞர் அண்ணா


மோகன் : ஓ... அதுவா? நான் மாலை எனக்காக என்று சொல்லவில்லையே. எனக்காகத் தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் சுந்தர், அதற்காக வந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்.

(சாந்தாஜி மாலையை அவனிடம் வீசி எறிந்து)

சாந் : இந்தா! நீ கேட்டாயோ இல்லையோ! இந்து இந்த மாலையை உனக்காகத் தான் தயாரித்திருப்பாள், நான் தேவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னால்...

(மோகன் மாலை அணிந்து கொள்ள, இந்து அவனை வணங்குகிறாள். சாந்தாஜி பார்த்து விடுகிறார். மோகன் அப்படியே பாம்புபோல கையை ஆட்டுகிறான்)

என்னடா மோகன் கையை ஆட்டுகிறாய்?

மோகன் : பாம்பாட்டம் காட்டுகிறேன்.

சாந் : பாம்பாட்டமல்ல; நீங்கள் இரண்டு பேரும் வரவர குரங்காட்டம் ஆடுகிறீர்கள்.

இந்து : அப்பா! பாதி ராமாயணமே அது தானே.

(இந்துவை அடிக்க சாந்தாஜி ஒடுகிறார். இந்து ஒடிவிடுகிறாள். சாந்தாஜி சிரித்துக் கொண்டே)

சாந் : இந்து மகா குறும்புக்காரி. அவள் அம்மாவும் அப்படித்தான்...சரி, சந்திரமோகன்! உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?

மோகன் : தெரியாதே!

சாந் : தெரிந்துக் கொள். இனி இந்துவை நீ பார்க்கக்கூடாது. அவளைப்பற்றி நினைக்கவும் கூடாது.

(மோகன் திகைத்து, பிறகு விளையாடுகிறார் என்று எண்ணி)

மோகன் : கனவிலே அவள் வந்தால்....?