பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

31


காட்சி - 6

இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர், தர்மன்.

(தர்மன் வருகிறான்)

கேசவ : யார், தர்மனா? சௌக்கியமாடா...?

தர்மன் : சுகந்தானுங்க. நீங்க சுகந்தானுங்களே! சுகமாத்தான் இருப்பீங்க; கேக்க வேணுமா? நம்ம ராஜ்யம் பூராவும் இப்ப சுகமாத்தானே இருக்கு.

பாலச் : ஒய், பார்த்தீரா, பிரபஞ்ச மாறுதலை! தர்மன் ராஜ்யம் பூராவும் அறிந்தவனாகி விட்டான்.

தர்மன் : என்னங்க கேவலமாகப் பேசறிங்க. என் மகன் இப்ப சிவாஜி மகாராஜா பட்டாளத்திலே சேர்ந்து ஊர் நாடெல்லாம் சுத்தி வரான்லே. அவன் சொல்லித்தான் ஊர் க்ஷேமங்கள் தெரியுது. நான் என்னத்தக் கண்டேனுங்க. நான் உண்டு. ஏர் உண்டுன்னு இருக்கிறவன் தானுங்களே.

கேசவ : அது சரிடா தர்மா உன் மகன் பட்டாளத்திலேயா இருக்கான்?

தர்மன் : ஆமாங்க!

பாலச் : கர்மம் யாரை விட்டது?

தர்மன் : ஏன் அப்படிச் சொல்றீங்க? அவன் பட்டாளத்திலே சேர்ந்து மராட்டிய ராஜ்யத்தை கீர்த்தி உள்ளதாக்கி வர்றான். நல்ல காரியந்தானே நடக்குது.

கேசவ : என்ன மகா நல்ல காரியம்? ஏண்டா தர்மா தேச சேவை,ராஜ சேவை, வீரம் என்று என்ன தான் பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்; சண்டைன்னா