பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

33


கேசவ : யார் இல்லேன்னா? ஏன் ஓய்! நேக்கு அது தெரியாதுன்னு நினைத்தீரோ? நான் என்ன சாஸ்திரத்தை சாங்கோபங்கமாகத் தெரியாதவனா? இல்லை; என்ன உமது நினைப்பு? ஓய்! நான் சாமான்யாளிடம் சிட்சை கேட்டவனல்ல ஓய்! சாட்சாத் காகப்பட்டரிடம் பாடம் கேட்டவனாக்கும்.

பாலச் : ஓய், கேசவப்பட்டர்! சும்மா பேசாதேயும். நீர் மட்டுந்தானா காகப்பட்டரிடம் பாடம் கேட்டது. அவரிடம் பிரதம சிஷ்யராக இருப்பவர் யார் தெரியுமோ நோக்கு? சொல்லும் பார்ப்போம்?

கேசவ : இது தெரியாதோ? ரங்குபட்டர்.

பாலச் : அந்த ரங்குபட்டர் யார் தெரியுமோ?

கேசவ : என்ன ஓய் இது? ரங்குபட்டர் யார் என்றால் காகப்பட்டரின் சிஷ்யர்.

பாலச் : ரங்குபட்டர் காகப்பட்டரின் சிஷ்யர். காகப்பட்டர் ரங்குபட்டரின் குரு. இது தெரியாமதான் கேட்டேனாக்கும். ரங்குபட்டர் யார் என்று கேட்கிறேன் ஓய்!

கேசவ : யார்? நீர்தான் சொல்லுமே...

பாலச் : போகட்டும், என் அத்தை தெரியுமோ நோக்கு?

கேசவப் : நோக்கு ரெண்டு பேருண்டே அத்தைமார். நீர் யாரைக் கேட்கிறீர்?

பாலச் : சிகப்பா ஒல்லியா இருப்பள் ஒரு அத்தை.

கேசவ: கொஞ்சம் வாயாடுதல்...

பாலச் : ஓய்! வாயாடுதல் இல்லை அவள். அவ எதிரே சொல்லியிருந்தா தெரிஞ்சு இருக்கும் உம்பாடு. அவளுடைய பெயர் அலமு. நான் சொல்றது அவ