பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

35


தர்மன் : சரிங்க! நான் வர்றேனுங்க.

(நமஸ்கரித்துப் போகிறான்)

கேசவப் : ஓய்! இதென்ன வலிய வர்ற சீதேவியை உதைத்துத் தள்ளுறீர்? கரிநாளும், கத்தரிக்கா நாளும்னு சொல்லி...

பாலச் : கேசவப்பட்டரே! உம்ம மூளை வரவர வரண்டுண்டே போறது. நாமெ ரெண்டு பேரும் நாளைக்கு அடுத்த கிராமத்திலே சிரார்த்தத்துக்குப் போகணுமே, அது கவனமில்லமெ, நாளைக்கு ஹோமம்ணு சொன்னீரே?

கேசவப் : அடடா! நான் மறந்தே போனேன். நல்ல வேளையா நோக்காவது கவனம் வந்ததே.

பாலச் : வரவேதான் கரிநாள்னு ஒரு போடு போட்டேன். வாரும் போகலாம். (போகிறார்கள்)

காட்சி - 7

இடம் : வீதி

உறுப்பினர்கள் : சாந்தாஜி, பாலாஜி.

(சாந்தாஜியும், பாலாஜியும், எதிர் எதிரே வந்து சந்திக்கின்றனர்.)

பாலாஜி : நமஸ்காரம், சாந்தாஜி, நமஸ்காரம்.

சாந் : நமஸ்கார்...நமஸ்கார்...

(போகிறார்)

பாலாஜி : ஏது சாந்தாஜி! கோபமாக இருக்கிறீர்கள்?

சாந் : (கோபத்துடன்) நான் கோபமாக இருப்பதாக யார் சொன்னார்கள்? அந்தப் பயல்தான் சொல்லியிருப்பான். சந்திரமோகன்தானே சொன்னான்?

பாலாஜி : ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.