பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிஞர் அண்ணா


கொடுக்கிறேன். என் தந்திரத்தைப் பாரும். ஒரு வாரத்தில் அவனைக் காதலன் வேஷத்தில் உமது மாளிக்கைக்கு அனுப்பி வைக்கிறேன். ம்... செலவுக்கு மட்டும்...

(பணத்தை மடியிலிருந்து எடுத்து)

சாந் : ஒரு சல்லிகூடத் தர முடியாது. இந்த இருநூறு வராகனுக்கு மேல்.

பாலாஜி : இதிலேயே முடித்து வைக்கிறேன். வெற்றி கிடைத்ததும் தாங்களாகவே இனாம் தராமலா போகப் போகிறீர்கள்.

சாந் : பார்ப்போம்! போய்வாரும் ஜெயத்துடன்.

(சாந்தாஜி போகிறார்)

பாலாஜி : சரியான வேலை கிடைத்தது. நம்ம சாமர்த்தியம் இப்படி இருக்கு! அவ என்னடான்னா நம்ம முட்டாள்னு நெனைக்கிறா, நினைக்கிறாளா? சொல்லவே சொல்றா... ஆசையிலே....

(போகிறான்)

காட்சி - 8

இடம் : விருந்து மண்டபம்

உறுப்பினர்கள் : சிட்னீஸ், சிவாஜி, சர்தார்கள், நடன மாது.

(நடனம் நடக்கிறது. ஆசனங்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. முகப்பில் பெரிய ஆசனம் சிட்னீஸ் உலவியப்படி இருக்க சர்தார்கள் வருகின்றனர்)

சிட்னீஸ் : வாருங்கள்! வாருங்கள்! மராட்டிய சர்தார்களே! வந்து அமருங்கள். உங்கள் வருகையை மாவீரன் சிவாஜி மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

1. சர்தார் : சந்தோஷம்! விருந்தை இந்த மண்டபத்திலேயே நடத்திவிட உத்தேசமா?