பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

39


சிட்னீஸ் : ஆமாம்! அந்தப் பெரிய மண்டபத்தை ஆயுதக் காட்சிச் சாலையாக்கிவிட்டார்.

2.சர்தார் : இருவரிசைகள் உள்ளன. சரி, அதோ ஒரு ஆசனம் இருக்கிறதே, முகப்பில் தனியாக... அது ஏன்? அது யாருக்கு?

சிட்னீஸ் : அந்த ஆசனத்தில்தான். அஞ்சா நெஞ்சன் சிவாஜி அமரப் போகிறார்.

1. சர்தார் : அமரட்டும் ஆனால் அந்த ஆசனம் இருவரிசைகளிலேயே ஏதேனும் ஒன்றோடு சேர்த்துப் போடப்படாமல் தனியாக, இரு வரிசைக்கும் மேலாக, உயரமாகப் போடப்படுவானேன்?

சிட்னீஸ் : விருந்துக்கு அவர் தலைமை தாங்குபவர் என்ற முறையிலே, இது போல் அமைத்தோம்.

1. சர்தார் : அதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

2. சர்தார் : இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் விருந்துக்கு வரச் சம்மதித்திருக்கமாட்டோம்.

1. சர்தார் : ஏன் இப்படி எங்களை வரவழைத்து அவமானம் செய்ய வேண்டும்?

சிட்னீஸ் : அவமானமா? இந்த ஆசன அமைப்பு முறையா உங்களை அவமானம் செய்கிறது?

1. சர்தார் : மானாபிமானம் விஷயமாய், மகானுபவரே! எங்களுக்குக் கொஞ்சம் அக்கரை. உண்டு. அவ்வளவுதான்.

சிட்னீஸ் : மராட்டியத்தை வாழ்விக்க வந்த மாவீரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாத மராட்டிய சர்தார்களா, இப்படி ஆட்சேபனை கூறுவது?

2.சர்தார் : 'போ, இந்தக் களத்துக்கு; தாக்கு, அந்தப் படையை! அதன் அளவைப் பற்றி அச்சம் வேண்டாம். தாண்டும்