பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அறிஞர் அண்ணா


அந்த அகழியை' என்று அவர் கட்டளையிட்டபோது ஏன் என்று கேட்டதில்லை. ஆகுமோ என்று யோசித்ததில்லை. சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தால். ஆனால் சிட்னீஸ்! சாம்ராஜ்யம் தர்ம சூன்ய ராஜ்யமாக இருக்கவுமா சம்மதிக்க முடியும்?

1. சர்தார் : மிக மிக சாமான்யர்களுக்கும் விளங்கக் கூடிய கலாச்சாரத்தையே மறந்து விட்டார்களே இப்போதே. அவர் எங்கள் நெஞ்சுக்கு உரம் ஊட்டியவர்தான். ஆனால் எமது குலத்துக்குமா நஞ்சு ஊட்ட இடம் தரவேண்டும்?

2. சர்தார் : சிவாஜி வீரர், தீரர், தியாகி, தேசோத்தாரகர். எல்லாம் சரி. ஆனால் அவர் உயர்ந்த ஜாதியினரல்ல. குடியானவர் குலம். பிரபு, கோர்பாதி, நிம்பால்கர், சவாந்து போன்ற உயர்குல மக்கள் கூடியுள்ள இந்த இடத்திலே அவர் தலைமை வகிப்பது முறையாகாது. குலதர்மத்துக்கு இது தகாது.

1. சர்தார் : விருந்துக்குத் தலைமை தாங்க, அந்த உயர்ந்த ஆசனத்தில் அவர் அமர்வதற்கு நாங்கள் சம்மதித்தால், எங்கள் குலங்களை விட அவர் பிறந்த குலம் மேலானது என்று நாங்கள் ஒத்துக் கொண்டதாக அல்லவா அர்த்தப்படும்?

2. சர்தார் : அது எங்ஙனம் சாத்தியப்படும்? எப்படி அதை ஒப்புக் கொள்ள முடியும்? நாங்கள் அனைவரும் சிவாஜியினுடைய வீரத்தை ஒத்துக் கொள்கிறோம். போரிலே அவர் - புலி: ஆட்சேபிப்பார் இல்லை. அவருக்காக வாள் ஏந்தி வையகத்தின் கோடி வரை சென்று போரிடவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்கள் குலத்தைவிட அவர் பிறந்த குலம் மேலானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது நான்.

1. சர்தார் : நானும் தான்!