பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

41


2. சர்தார் : நானும் தான்!!

(சிட்னீஸ் கோபமும் சோகமும் கொண்டு)

சிட்னீஸ் : முடிவான பேச்சா இது?

1.சர்தார் : ஆமாம்! ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். குலதர்மத்தை இழக்க மாட்டோம். இது விருந்தல்ல; விஷமூட்டுமிடம். எங்களுக்கு இங்கு வேலையில்லை.

(எல்லோரும் போகின்றனர். சிட்னீஸ் கோபத்தோடு தட்டுகளை வீசி எறிகிறான்.)

சிட்னீஸ் : விருந்து மண்டபம் விவாத மண்டபமாகிவிட்டது. குதூகலிக்க வேண்டிய கூடத்திலே, கோபமும், கொந்தளிப்பும், மூண்டன. சிவாஜியின் வீர உருவம்...

(சிவாஜி அப்போது சிட்னீஸ் அறியாவண்ணம் பின்புறமாக வந்து சிட்னீஸ் பேசுவதைச் சோகமாகக் கேட்டல்)

அவருடைய வெற்றிகள். அவர் உருவாக்கிய புதிய மராட்டியம் எதுவுமே அந்தச் சர்தார்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குலம் மட்டுமே தெரிகிறது. குலபேதமெனும் தேள் கொட்டிய குரங்குகள். விருந்து மண்டபத்திலே இந்த விபரீதம் நேரிட்டது தெரிந்தால் வீரத்தவைவன் விசாரத்தில் ஆழ்ந்து போவாரே.

(சிவாஜி வர, அவர் முன் மண்டியிடுகிறான்)

சிவாஜி : விசாரம் எழாமல் இருக்க முடியுமா சிட்னீஸ் எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறோம், சோர்ந்து கிடந்த மராட்டியத்துக்குப் புத்துயிர் அளிக்க, விமோசனமில்லை. விடுதலை இல்லை என்று எண்ணி ஏங்கிக் கிடந்த நாட்டிலே, வீட்டுக்கோர் வீரனைக் கூட்டினோம். விரோதிகளை முறியடித்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றபோது எந்த சர்தார்கள் நம் கண் காட்டிய வழி செல்லக் காத்து கிடந்தனரோ அவர்களே அல்லவா இன்று விதண்டாவாதம் பேசுகின்றனர். நண்பா?