பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாலாக்ஷியின் ஏமாற்றம்

௨௧

ஆவதற்கு முன்னேயிறந்தானா? பிந்தி இறந்தானா?” என்று வினவினாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:— “அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறிவிட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின“ என்றார்.

“சரி; அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆக்ஷேபமின்றி இவளை மணம் புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?“ என்று கிழவி கேட்டாள்.

“ஆம், இவள்தான் அவர் விரும்பிய லக்ஷணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், ௸ டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை நினைத்தேன். ஆனால் இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ“ என்பதுதான் சந்தேகம் என்று பந்துலு சொன்னார்.

இதைக் கேட்டவுடனே கிழவி:— ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம் போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல