பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரசேலிங்கம் பந்துலு

௩௩

தெரியுமா?“ என்று கோபாலய்யங்கார் கேட்டார். “தெரியும்“ என்றாள் சந்திரிகை. “எங்கே, ஒன்று பாடு, கேட்போம்“ என்றார் கோபாலய்யங்கார்.

“அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?“ என்று சந்திரிகை கேட்டாள்.

“பாடு“ என்றார் கோபாலய்யங்கார்.

சந்திரிகை பாடத் தொடங்கினாள்:—

நந்தலால் பாட்டு

யதுகுல காம்போதி ராகம்—ஆதி தாளம்.

பார்க்கு மரத்தி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
      பச்சை நிறந்தோன்றுதடா, நந்தலாலா;
காக்கைச் சிறகினிலே, நந்தலாலா—நின்றன்
      கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;
கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
      கீத மிசைக்கு தடா, நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா—நின்னைத்
      தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.


ஸஸ்ஸாஸா—ஸம்மாபதா—பததபபமபா—பாபா
பநீஸதபா—மாகா—ஸரிமகரீ—கெகரிரிஸஸா.

இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித

௪, ௩