௩௪
சந்திரிகை
ஸங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.
“இதுதான் சுவர்க்கம்” என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
“எது?“ என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
“இந்தக் குழந்தையின் பாட்டு“ என்று அய்யங்கார் சொன்னார்.
“ஸங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?“ என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
அதற்கு கோபாலய்யங்கார்:— “மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்“ என்றார்.
“குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்“ என்று பந்துலு சொன்னார்.
“அவையும் சேர்ந்துதான்“ என்று அய்யங்கார் சொன்னார்.
இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.
அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “இந்தக் குழந்தையையும் இதன்