பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபாலய்யங்காருக்கு விவாகம்

௫௯

குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீது உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை ஸாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச்செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுசுடர்கின்ற விழிகளும், துருக்கமீசையும், விரித்த மார்பும் திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்க கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர்மனதை மிகச் சஞ்சலப்படுத்திற்று.

“நான் என்ன செய்வேன். சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோக்ததைப் பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால் ஸ்ரீமந்நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சரணாகதி