பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௪

சந்திரிகை

“என்ன மீனாக்ஷி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்து கொள்ள ஸம்மதந்தானா?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாக்ஷி “சம்மதம்“ என்று மெதுவாகக் கூறித் தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாக்ஷியும் பிரம ஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ௸ ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.

[ஐந்தாம் அத்யாயம் முற்றிற்று]


ஆறாம் அத்யாயம்.


விசாலாக்ஷிக்கு நேர்ந்த ஸங்கடங்கள்.

கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள ஸம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாக்ஷி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி