விசாலாக்ஷியின் ஸங்கடங்கள்
௭௩
வுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப் போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தலையில் ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக, இரண்டு நாற்காலிகளின்மீது, அதாவது சாய்விடமில்‘த நாற்காற் பலகைகளின்மீது, வைக்கப்ப்டடிருந்தன.
அதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாக்ஷி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குககையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாக்ஷி விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி:— “அடீ, விசாலாக்ஷி! நீ எப்படி யேனும் மறு விவாகம்