பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬0

சந்திரிகை

னும் எத்தனையோ கோடி வருஷங்களுக்குப் பிறகு இவை ஒரு வேளை அழியக் கூடு மென்று அந்த சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே, நாம் அவற்றை நித்ய வஸ்துக்களாகப் போற்றுதல் தவறாகாது. இது நிற்க.

இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வெறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்று விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள்— முதலிய எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க, இவ்வுலக இன்பங்கள் க்ஷணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள் நெஞ்சுறுதி யில்லாதோர்.

இன்ப மயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால் அது எப்போதும் தவறாததோர் இன்ப உற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும். அங்ஙனமின்றி மானுடர் எப்போதும் காதலின்பத்தில் உண்மை தவறிவிடுவதாலும், ஒரு மனிதனையே, மாறுதலின்றிக் காதல் செய்து வருத-