13
செயல்கள் கழகத்தின் கொள்கையில் ஒன்றாக இருக்குமானால் இப்போதே நான் கழகத்தின் மெம்பர் சிப்பை ராஜினாமா செய்கிறேன். (போகிறான்).
சாம்: என்ன அது? கழகத்தின் கொள்கை இதுவென்று யார் கூறியது? நமக்குள் தானே தனிப்பட பேசிக் கொண்டிருந்தோம்.
தங்க: ஒழிந்தது பீடை!
கோத: நாளை உன் தகப்பனார் திதிக்கு அவன் மாமனார்தான் வரப்போகிறார் புரோகிதராக.
தங்க: தெரிந்து விட்டது பிரம்மஹத்திக்கு! வாருங்கள் போகலாம்.
—★—
[லலிதா பானுவிடம் நடனம் கற்றுக்கொள்கிறாள்.வரதன் வந்து நின்று கவனிக்கிறான்.]
லவி: என்னடி பானு பாடுகிறேன். ஆடிக்காட்டு.
“என்னடியே சகி இன்னமும் வரக்காணேன்”. (என்று பாட பானு ஆடிக்காட்டி பாதியுடன் நிறுத்துகிறாள்)
லலி: பானு? இன்னைக்கு இதுவரை போதும். பாக்கியை நாளைக்கு வந்து சொல்லித் தரணும்.
பானு: சரி. (போனபின் பின்னால் வந்து நின்று கவனித்த வரதன்)
வர: லலிதா மாமி! நான்வந்து அரைமணி நேரமாகுது.
லலி: நான் யாரும் வரலேன்னு நெனைச்சேன்!
- (முகத்தை சுளிக்கிறாள்)
வர: என்ன மாமி! மனக்கஷ்டம்? சௌக்கியந்தானே?
லலி: சௌக்கியமா இருக்கேன். எனக்கென்ன?
வர: பின்ன மாமாவுக்கு ஏதாவது......?
லலி: அவருக்கென்ன? வளவளப்பான மேனி! மன்மத லட்சணம்!