15
வாஞ்: ஆமப்பா அடியே நீ சும்மா போடி! (கையை ஓங்குகிறார்)
வீரன்: என்ன? என்ன அய்யரே?
லலி: இவருக்கு இப்படித்தாங்க இருந்து இருந்தாப்போல வலுப்பு வரும்.
வீரன்: அப்ப— நீங்க போங்கம்மா.நான் கவனிச்சுக்கிடுறேன். கரண்டிக் காம்ப காயவச்சு ரெண்டு இழு இழுத்துவிட்டுறேன். அப்புறம் இந்த மாதிரி வலுப்பு வரவே வராது.
லலி: வேண்டாங்க! நானே இழுக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க!
வீரன்: (லலிதாவை நோக்கியபடி) அப்போ... நான் போயிட்டு அப்புறமா வரவா? சரி... வர்ரேன். (போகிறான்)
லலி: (வாஞ்சிநாதரிடம்) ஏன் இப்படி என் மானத்தை வாங்குறேள்? இப்பவே என் பெறந்த ஆத்துக்குப் போய்த் தொலையறேன். (வேகமாகப் போகிறாள்)
வாஞ்: அடியே வேண்டாண்டி! வேண்டாண்டி!
- (அய்யர் பின்னாலே ஓடுகிறார். வரதன் சிலையாக நிற்கிறான்.)
—-★—
(கோதண்டம், தங்கவேல் இருவரையும் வாஞ்சிநாத சாஸ்திரி சந்திக்கிறார்)
கோ: அய்யரே! ஒரு டிக்கட் கொடுங்க,
வாஞ்: டிக்கட்டா? என்ன?
தங்க: மோட்சத்துக்கு ஒரு டிக்கட்.
வாஞ்: விநாசகாலே சர்வ நாசம்னு மந்திரம் சொல்லுது.
கோ: ஏன் சொல்லுது?