18
தங்க: அவரு வாய் என்ன சாமான்யமா? ஊரு சொத்துக்கு அது வாசப்படியாச்சே!
வேதம்: ஊருல இருக்கிறவகளுக்காக உழைக்கிறவரப்பா இவரு.
கோத: வீட்டுல இருக்கிற அம்மா அகலிகை.....
தங்க : இவரும் ஊருக்கு உழைக்கிறாரு. அம்மாவும் ஊருக்கு உழைக்குது ! இதுல என்னப்பா இருக்கு?
- (வாஞ்சிநாதர் மிரட்சியுடனும், கோபமுடனும் வெளியேறுகிறார்)
—-★—
வாஞ்: தெரியுமா துரைராஜ் சங்கதி?
துரை: என்ன?
வாஞ்: சாம்பசிவம் என்னை அடித்தான்ல? போலீஸ்ல சொன்னேன். கொண்டுபோய் ஒரு வாரம் உள்ளே தள்ளீட்டா.
துரை? ஐயர்வாள் ! உமக்கு பரம திருப்திதானே?
வாஞ்: பின்னே அடிக்கலாமோ?
துரை: சாம்பசிவம் மட்டும் அடித்தானா? ரெண்டுபேர் சேர்ந்து அடித்தார்களா?
வாஞ்: ரெண்டுபேர் சேர்ந்துதான். அவா ஆம்பிடலே! இவனுக்கு அவா தண்டணையையும் சேர்த்து ஒரு வாரம் போட்டுட்டா.
துரை: ஒருவாரம்தானே. பரவாயில்லை. இதற்காக கஷ்டப்பட மாட்டான் சாம்பசிவம். அது சரி...அடி பலமா?
வாஞ்: ஏதேது — இன்னும் கொஞ்சம் நேரம்போனா அடி பலமா, வலி பலமான்னு கேட்பே போலிருக்கே?
துரை: சும்மா சொல்லுங்கோ.
வாஞ்: சாம்பசிவம் வெளியே வந்தவுடனே கேளு. சொல்லுவான்.