21
வாஞ்: ஊரு இருக்குற இருப்ப பயக கெடுத்துடுவாணுகளே
சிங்: நீ சும்மா இரு ஐயரே. பயக சொல்றதும் சரியாத்தான் இருக்கு. நீங்களும் காலத்த அனுசரிச்சுப் போகணும். நீங்கள்லாம் தாழ்ந்தவக. நாங்கள்லாம் உயர்ந்தவக. நீங்கள்லாம் கீழ்சாதி. நாங்கள்லாம் மேல்சாதியினு சொல்லி சும்மா மிரட்டுகிறீங்களே.
வாஞ்: என்ன முதலியார்வாள்! நீங்களும் அவனுக மாதிரி பேசுறீங்க?
சிங்: பின்னே என்ன ? அவன் திதி கொடுக்கலேங்கிறதுக்காக எல்லாரையும் அடிக்கிறதா? என மககூட நேத்து சாதி இரண்டொழிய வேறில்லையினு பாடிச்சு. அது சரிதானய்யா.
வாஞ்: இன்னைக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையினு பேசுவாங்க ஜாதி இல்ல-ஆசாரம் இல்லையினு பேசுவாங்க. பேசிட்டா போதுமா? நாய்க்கருக்கும் முதலியாருக்கும் என்ன வித்தியாசம் ? படையாச்சிக்கும் சேர்வைகாரருக்கும் என்ன வித்தியாசம். இப்படிப் பேசுறவனுக நாளைக்கு பணக்காரன் ஏது ஏழை ஏதுன்னுகூட பேசுவானுங்க. நான் எதுக்குச் சொல்றேன்னா நாளை கட்டுக் குலைஞ்சிடும்னு சொல்லவர்ரேன்.
சிங் : ஆமா... ஐயரு சொல்றதும் சரிதான்.
- (பின்னால் மாறுவேஷத்துடன் நின்ற துரைராஜ் இதைக் கேட்டுவிட்டு)
துரை: எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டியதுதான்
வாஞ்: இது என்ன ரஷ்யாவா?
துரை: அங்கேகூட முன்பு இருந்தார்கள் உங்களைப்போன்றோர். அவர்களை அழித்து ஒழித்துவிட்டது காலம்!
வாஞ்: இங்கே அது நடக்காது.
துரை: ஏன்? ரஷ்யாவில் ஏது தலைவிதி என்று பாடினானே. அவனைப்பாருங்கள் அவன் உடலிலே பூராவும் புண்ணாக இருக்கிறது. உள்ளே கோவிலில் ஆண்டவன் உருவாகி-