23
படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு என்ற வினா அவனுக்கு எழாதா. எழுந்தால் உங்களைப் போன்றோரது நிலை என்னவாகும் என்பதை அறிந்து திருந்திடுங்கள். இல்லையேல்......
சிங்: ஏய்! நீ யார்டா? (தாடியைப் பிய்க்கிறார். எல்லோரும் திகைக்கிறார்கள்) ஆ! துரைராஜ்.
வா: நேக்கு அப்பவே சந்தேகம்!
சிங்: ஏய் பிடிச்சுக்கெட்டு தூண்ல. ஐயரே ஒரு மாங்கா மாலைய எடுத்து அவன் கையிலே கொடு. நான்போய் போலீஸக் கூட்டி வர்ரேன். ஐயரே பாத்துக்க இவன. டேய் நீங்கள்லாம் போயி ஊருல இருக்கிற ஆளுகள கூட்டிவாங்க.
(எல்லோரும் போகின்றனர். ஐயர் காவல் செய்கிறார்.)
வா: இப்பத் தெரியுதா ? (துரைராஜ் அழுகிறான்) அழு நன்னா அழு. பிறாமணாள் தோஷம் பொல்லாதது. தேவி பூஜை குறைஞ்சது மாதிரி பிறாமண பூஜை குறையுது நாட்டுலேயினு சொன்னேனே கேட்டியா? இப்பப் படு. ஆயுள் பூறா தண்டனை தருவா. சாம்பசிவத்துக்கு நல்ல இடத்துல பெண் தர்ரதாக இருந்தா. அது கெட்டுச்சு. பிறாமணாளுக்கு பெரிய மனுஷ்யா ஆதரவு இருக்கு. உங்களுக்கு யார் இருக்கா? இப்ப அழு. பிராமணா தோஷம் விடுமா?
துரை: சாமி ! தெரியாம செய்துட்டேன். நான் அனாதை. நீங்கள் தான் காப்பாத்தணும்.
வா: இனிமே பிறாமணாள தூஷணமா பேசுவியா?
துரை: இனிமே பேசமாட்டேணுங்க. எப்படியாவது என்னை அவிழ்த்துவிடுங்க. ஓடிடுறேன்.
வச: அவிழ்த்து விடவா ? அய்யோ !
துரை: சாமி! மாங்கா மாலைய நீங்களே வச்சுக்கங்க. நான் தப்பி ஓடிப்போறேன். மாலைய நான் எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்னு சொல்லிடுங்க.
வா: நீ எங்க போனாலும் விடமாட்டாளேடா!