24
துரை: நான் எங்கேயாவது ரங்கோன் பினாங்கு பக்கம் ஓடிடுறேன் சாமி. நல்ல மாலை எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.
வா: (ஆசையுடன்) நல்லாத்தான் இருக்கு. ஆமா, உன்னை அவிழ்த்து விட்டுட்டா சர்க்கார் என்னை சும்மா விடுமா?
துரை: உங்களை யார் என்ன செய்ய முடியும். நல்லா யோசனை பண்ணிப் பாருங்க,
வா: பிராமணாளப்பத்தி இனிமே ஒண்ணும் பேசாதே! பகவத் நிந்தனை செய்யாதே!
துரை: ஜென்ம ஜென்மத்துக்கும் பகவத் நிந்தனையோ,பகவத் அபசாரமோ, பிராமண தூஷனையோ செய்வதில்லை.
- (மாங்கா மாலையை இடுப்பிலே சொருகிக் கொண்டு துரைராஜை அவிழ்த்துவிடுகிறார் துரைராஜ் ஓடி மறைந்தபின்)
வா: ஐயோ திருடன் திருடன் ஐயா! நகையை அடிச்சிட்டுப் போயிட்டான்யா ஓடியாங்கோ! ஓடியாங்கோ.
(சிங்காரவேலர் மற்றும் பலர் ஓடி வருகின்றனர்.)
வா: காலப்போற போக்கப் பாத்தியாங்க. அந்தப்பய ஓடிப் போயிட்டான்.
சிங்: ஆ! ஓடிட்டானா. எப்படி ஓடினான்? அப்படிக் கட்டினோம்.
வா: பய சிம்மம் போல கர்ஜித்துண்டு ஒரு திழிரு திமிரினான் பாருங்கோ. கட்டியிருந்த கயிறு பொடி பொடியாயிட்டுது பிடிக்கலாம்னு கிட்டப் போனேன். விட்டான் ஒரு அறையும் குத்தும். நான் என்ன முடியும் வயதானவன். புலிப்போல பாய்ந்தான். ஓடிப்போய்விட்டான்.
சிங்: போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணியாச்சு. எப்படியாவது பிடித்து விடுவார்கள். சரி வாருங்கள் போகலாம்.
- (வஞ்சி நாதர் மாங்காய்மாலையுடன் கம்பீர நடை போடுகிறார்)
—★—
(சிங்காரவேலர் வேதம்மாவிடம்)
சிங்: வேதம்மாவா? வா வா.சாம்பசிவம் என்ன செய்கிறான்? ஊர் பூறா பேசுது.
வேத: என்னங்க விஷயம்?
—★—