25
சிங்: எல்லாம் உன் பையன் விஷயந்தான்: செல்லம் கொடுத்து கெடுத்துட்டே.
வேத: என்னங்க செய்கிறது. ஒரே பையன்.
சிங்: அது சரி-உன் பையன் விஷயம் பெரிய ஆபத்து.
வேத: என்னங்க ஆபத்து?
சிங்: துரைராஜ் கோவில்ல இருந்த மாங்கா மாலைய திருடிக் கிட்டுப் போயிட்டான். கழகத்துல உன் பையனும் சம்பந்தப்பட்டவன். கவனிச்சுக்க.
வேத: அதுக்கு என் பையனுக்கு என்னங்க ஆபத்து?
சிங்: போலீஸ்ல உன் பையனையும் அரஸ்ட் பண்ணுவாங்க.
வேத: நீங்கதாங்க காப்பாத்தணும்.
சிங்: சரி கவனிக்கிறேன். பணமா பெரிசு?
வேத: உங்ககிட்ட இருக்கிற ரூபாய் ஆயிரத்தி எண்ணூறையும் செலவு செய்தாவது இதல என் பையனுக்கு எதுவும் வராம நீங்கதான் பார்த்துக்கிடணும்.
சிங்: பகவான் வேதம்மா விஷயத்துல ஒரு குறையும் வைக்க மாட்டார்.
—★—
- [மானம் பெரிதென - என்று சந்திரா நந்தவனத்தில் ஆடிக்கொண்டிருப்பதை சாம்பசிவம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.]
சாம்: ஆஹாஹா!
சந்: யார் நீங்கள் ? எதைக்கண்டு ரசித்தீர்கள்?
சாம்: மயில் ஆடிற்று! குயில் பாடிற்று! மான் துள்ளிற்று!
சந்: நீர் நெருப்புடன் விளையாடுகிறீர். நான் யாரென்பது தெரிந்திருந்தால் இப்படி வர்ணித்திருக்கமாட்டீர்.
சாம்: இதில் நான் என்ன வர்ணிப்பது? வண்டு பாடிற்று என்று உண்மையைத்தானே கூறினேன். எரிமலையைக் காண வந்தேன்: ஆனால் குளிர் நிலவைக் கண்டேன்.
சந்: இது பெண்களின் தனியிடம். எங்களுக்குச் சொந்தமான பூங்கா?