29
தோழி: சேற்றிலே செந்தாமரை இருந்தாலும் பறிப்பேன் என்றீர்களே?
சாம்: சரி என் மனது சரியில்லை. நாளை மாலையில் சந்திப்பதாகச் சொல்.
- [துரைராஜ் ஒரு இடத்தில் படுத்திருக்கிறான். நல்ல தூக்கம். அழகூர் மடாதிபதியின் கையாட்களான கந்த பூபதியும் முருகதாசரும் துரைராஜைப் பார்க்கிறார்கள்.]
- வாழ்வதிலே இன்ப துன்பம்-பாடல்
- (பாடல் முடிந்தபின்)
கந்த: முருகதாசரே! தேடிப்போன மூலிகை காலிலே சிக்கிக் கொண்டது.
முரு: என்ன சேதி பூபதி?
கத்த: நாம் தேடியது கிடைத்து விட்டது. (சைகை செய்கிறார்)
முரு: சரியான பாத்திரம்!
கந்த: நம் திட்டத்தை இவன் ஒப்புக்கொள்ள வேண்டுமே. மறுத்து விட்டால்?
முரு: முதலில் எழுப்பும். பேசிப் பார்க்கலாம்.
கந்த: ஏய்! ஏய்! எழுந்திரு! எழுந்திரப்பா அதிர்ஷ்டம் வந்திருக்கிறது உனக்கு. (துரைராஜ் கண்களை கசக்கி விட்டு பார்க்கிறான்) எழுந்திரு
துரை: காவியைக் கண்டவுடன் கன்னத்தில் போட்டுக் கொள்பவன் நானல்ல. போய் வாருங்கள்.
- (மீண்டும் படுக்கப் போகிறான். தடுத்து)
கந்த: எழுந்து எங்களுடன் வாப்பா முக்கியமான விஷயம் பேசணும்.
துரை: சடாமுனிவரின் சபகோடிகளான உங்களிடம் எனக்கு என்ன விஷயம் பேசவேண்டியிருக்கிறது. போங்களய்யச் தொந்திரவு கொடுக்காமல்.