32
மடாதி: ஆகவே மெய்யன்பாகவே, இந்திரியம் என்ற துஷ்டக் குதிரைக்கு அறிவு என்ற கடிவாளம் போட்டு அடக்கினால்தான் அது அறநெறிப்படி நடக்கும். இச் என்று இருக்கும் பச்சைகளை எல்லாம் கடக்க நேரிடும்போது, அதற்கு நிராசை என்ற கைகளும் துணை இருக்கவேண்டி நேரும். இவைகளையெல்லாம் அடக்கி விட்டால் எம்பெருமானின் பாதாரவிந்தங்களுக்குச் செல்லும் புண்ணியம் பெற்றவர்களாவோம்.
ஒருவன்: அய்யனே! உங்கள் உபதேசத்தால் எங்கள் உள்ளம் மகிழ்ந்தது.
மடாதி: அப்பனே ! மெளனம் - சுவாமிகள் மலையேறுகிறது.
ஒருவ: பிள்ளைகளுக்கு ஏதாவது தாங்கள் சொல்ல வேண்டும்.
மடாதி: குழந்தைகளே! மலட்டு மாடு மதுரமான பால் தருமா?
ஒருவ: ஆஹா! எவ்வளவு அபூர்வமான ஞானம்! வாருங்கள். எல்லோரும் காணிக்கையை செலுத்திவிட்டு விடை பெற்றுச்செல்வோம்.
மடாதி: என்ன சொத்து! எல்லாம் அவன் அருள்! அரஹர மஹாதேவ !
- (எல்லோரும் சேவித்துவிட்டு திரும்புகின்றனர். வெளியில் போயிருந்த சிஷ்யன் ஒருவன் ஓடிவருகிறான்)
சிஷ்: வசந்த மண்டபத்தை புதுபிக்க பிள்ளைகளிடம் நிதி சேகரிக்க வேண்டும். சுவாமிகளிடம் உத்திரவு கேட்கப் போகிறேன்.
ஒருவன்: சுவாமிகளை பார்க்க முடியாது.
கிஷ்: நீ போப்பா. அவசியம் நான் அவரை பார்க்க வேண்டும்.
ஒருவ: உன் இஷ்டம். சந்நிதானம் நிஷ்டையிலிருக்கிறார்.
சிஷ்ய: சேவித்துவிட்டு திரும்புகிறேன். நீபோ.
- (சிஷ்யன் வந்து) சுவாமி !
மடா: (கண் திறந்து பார்த்துவிட்டு) என்ன ? காயா பழமா?
சிஷ்: பழம்!
மடா? எங்கு கிடைத்தது?
சிஷ்: நமது தோட்டத்திலே.
மடா: இப்போது கனி எங்கு உளது?
சிஷ்: வசந்த மண்டபத்தில்