பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

[சிங்காரவேல் முதலியார் தன்வீட்டில் தனியே உலவிக் கொண்டு)

சிங்: மகான் சொன்னது பொய்யா! ஏன் இன்னும் வரவில்லை! புரோகிதர் சொல்லியிருக்கிறாரே - எனக்கு சொர்ணானுக் கிரஹமாமே (கதவுத் தட்டப்படுகிறது) இதோ வந்து விட்டார். (கதவை திறக்கிறார்)

(வாஞ்சிநாதர் ராம்சிங் என்பவனோடு வருகிறார்)

வாஞ்: வீட்டில் யார் இருக்கிறது!

சிங்: சந்திரா அத்தை வீடு சென்றிருக்கிறாள்.

வாஞ்: ராம்சிங் ஆரம்பிக்கலாம். முதலியார்வாள் கொண்டு வாருங்கோ!

சிங்: (தன் சொத்துக்களைக் காட்டி) ஐயரே! என் சொத்து பூராவும் இதுல இருக்கு. ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கமா இருக்கு லட்ச ரூபாய்க்கு மேல ஆபரணங்கள் இருக்கு,

வாஞ்: உட்காருங்க முதலியார்வாள்.

ராம்சிங்: ஓம்! மாகாளி. ஆங்காரி, ஜாவ் ஜல்தி ஜாவ், பூஜை நடக்கும் — உட்கார். மாகாளி! ஆங்காரி-ஓங்காரி ஜாவ் ஜாவ்! இவர் பேர்.

வாஞ்: சிங்காரவேல் முதலியார்.

ராம்: சிங்காரவேல்--கும்பிடு. கும்பிடு. இந்தா கோழி முட்டை!

சிங்: எதுக்கு?

ராம்: சாப்பிடு!

சிங்: சாப்பிடவா சரி, [சாப்பிடுகிறார்]

ராம்: [ஐயரிடம்] நீ சாப்பிடு!

வாஞ்: என்ன அது! பேர் என்ன சொன்னீங்க!

ராம்: கோழி முட்டை;

வாஞ்: கோழிமுட்டைய சாப்பிடவா!

ராம்: ஊம்! சாப்பிடு.

வாஞ்: [சாப்பிட்டுவிட்டு] நல்லா இருக்கு.

ராம்: நல்லா இருக்கா!

வாஞ்: இன்னும் ஒன்னு கொடு.

(ராம்சிங் சிங்காரவேலரின் முகத்தில் பச்சிலையைக் காட்டி மயக்கமுறச் செய்கிறான். முதலியார் சாய்கிறார்.)

வாஞ்: கொடுடா அவ்வளவையும் பத்திரப்படுத்திட்டு வர்றேன். (பணம் நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு)

வாஞ்: அடே! சிங்காரவேல் முதலி — உன் வாழ்வை மொட்டையடிச்சாச்சு, பணத்திமிர் பிடிச்சு ஆடினியில அழகூர்ல லலிதா போனா அப்படியிப்படினு என்னென்ன