42
சிங்: சந்திரா! உன்னை விபசாரியாக்கி நான் மகிழவா வேண்டும். தந்தையே மகளை விபசாரியாக்குவதா— ஐயோ! (அலறுகிறார்) சந்திரா — சந்திரா, நீ எனக்காக ஜமீன்தாரரின் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம். வேண்டாம். இதுவரை உன்னை கடுமையாக ஒரு சொல் கூட சொல்லாத நான் இன்று உன்னை அடித்து விட்டேன் ஐயோ உன் கன்னம் சிவந்து விட்டதே. அழாதே. நான் எக்கேடு கெட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன்.
வாஞ்: முதலியார் வாள் இது என்ன பேச்சு?
சிங் : என் மகளை நான் வற்புறுத்த மாட்டேன். அது கண் கலங்குவதை காண மாட்டேன்.
வாஞ்: குழந்தை விஷயம் புரியாம பேசுது. அதைப் பார்த்தா நடக்குமோ?
சிங்: கண் இருக்கிறதே.
வாஞ்: சிறையிலே வாட வேண்டுமே.
சந் : என்ன சிறையா? ஏன்
வாஞ்: அவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு.
சந் : என்னய்யா புரோகிதரே. விளக்கமாகச் சொல்லுங்கள்.
சிங்: வேண்டாம் வேண்டாம். சொல்ல வேண்டாம்.
வாஞ்: சொத்து பூராவும் கொள்ளை போய்விட்டது
சந்: சந்திரா என்னென்னமோ பேசுகிறீர்களே.
வா: யாரோ ஒரு பாவி எங்களுக்கு எப்படியோ மயக்க மருந்தை கொடுத்துவிட்டு சொத்து பூறாவையும் கொண்டு போயிட்டான். அதுதான் உங்கப்பா கண் கலங்குகிறார்.
சந்: சொத்துதானே அப்பா என்னை பணக்காரியாக்கியது. இப்போது ஏழையாகி விட்டேன். எப்படியும் நானும் அவரும் உழைத்து சாப்பிடுவோம்.
வா: இப்போ கொள்ளை போன சொத்துல கோவில் சொத்தும் இருந்தது. திடீர்னு நாளை சோதனை போட்டா உன் அப்பா கூண்டிலேறி நிக்கணும்.
சந்: ஐயோ, சொல்லாதீர்கள் அப்படி.
சிங்: மோசக்காரன் என்று போலீஸ் தூற்றுவரர்கள் பெரிய மனிதனின் யோக்கியதையைப் பாருங்கள் என்று மக்கள் ஏசுவார்கள்.