பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வெள்ளை: எசமான் கூப்பிட்டிங்களா?

மாயே: ஏண்டா உங்க அப்பா உன்னைவிட முட்டாளா இருந்திருப்பாரோ?

வெள்; ஏனுங்க எசமான்?

மாயே: உனக்குப் போயி வெள்ளையிணு பேர் வச்சிருக்காரு பாரு. நீயோ கருப்பா இருக்கிற...........

வெள்: எனக்குப் பேர் வச்சது எங்கப்பா இல்லைங்க. எங்க ஊர் ஐயரு வச்சதுங்க.

மாயே: ஐயருக சொல்றதுக்கு என்னடா. அக்கிரமக்காரனுக்கு புண்ணியகோடியினு பேர் இருக்கும். நொண்டிக்கு தாண்டவராயன்னு பேர் வைப்பாரு.

வெள்: அதுபோல தானுங்க எனக்கும்.

மாயே: அது சரி...... ஊருல எல்லாரும் என்னைப்பற்றி என்னடா சொல்றாக.

வெள் : தர்மராசான்னு சொல்லிக்கிடுறாக எசமான்.

மாயே: அப்படிச் சொன்னவக நீ சும்மாவாடா விட்டுட்டு வந்தே?

வெள்: ஏன் எசமான். உங்களைப் புகழ்ந்துதான் எசமான் பேசிக்கிடுறாக. தர்மராசாங்கிறது எவ்வளவு நல்லா இருக்குது பேரு.

மாயே: ஏண்டா தர்மராசாங்கிறது நல்ல பேறா?

வெள்: பின்ன இல்லைங்களா? நீங்க எல்லாருக்கும் உதவி செய்யிறீங்க. அதுனால தர்மர் மாதிரியினு சொல்றாக. இதுல தப்பு என்னங்க இருக்கு?

மாயே: அவன் அஞ்சுக்கு ஒன்னு லிமிட்டெட் கம்பெணி வச்சிருந்தானடா.

வெள்: அது என்னங்க லிமிடெட் கம்பெனி?

மாயே: தருமர் யாருடா?

வெள்: பஞ்சபாண்டவர்களில் மூத்தவருங்க.

மாயே: பஞ்சபாண்டவர் யார் யாருடா?

வெள்: தருமன்- பீமன்- அர்ச்சுணன்- நகுலன்-- சகாதேவன்.

மாயே: இந்த அஞ்சு பேரையும் நீ பார்த்திருக்கிறியா?

வெள்: இல்லைங்க எசமான். இருந்ததாக எங்க அப்பா எனக்குச் சொன்னாருங்க.

மாயே: உங்க அப்பா பார்த்தாராமா?