பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

—வேஷ்டி ஒரு ரூபாய்தான். பாக்கி முக்கால் ரூபாய் எங்கேயினு கேட்பியே! அது இவன்தான். பணத்தை பெட்டியிலே வச்சு பாதுகாக்கிறான்.

வெள்: சுத்தக் கருமி.

மாயே: இவன் தாண்டா கோபுரத்துக்கு தங்க முலாம் பூசினவன் போன பெரிய கிருத்திகைக்கு திருவண்ணாமலையில் எட்டுமனு சூடன் வாங்கி கொளுத்தினான், மறுநாள் ஒரு தொழிலாளி வீட்டையே கொளுத்தினான். முதல் நாள் தீப தரிசனம், அப்படியே மறுநாள் இந்த தரிசனம் போகச் சொல், (பரமதயாளுவை வெளியே அனுப்பிவிட்டு வந்த வெள்ளை)

வெள்: யாரோ கோதண்டமாம் — உங்களை பார்க்க வந்திருக்கிறாருங்க

மாயே : என்னடா—ரெண்டு வரி கூட படிக்கவிடமாட்டாங்க போலே இருக்கே, யார் வந்திருக்கிறது?

வெள்: கோதண்டமாம்.

மாயே : வரச் சொல்,

கோ: (வந்து) வணக்கம் ஐயா. என் பெயர் கோதண்டம்.

மாயே: கோதண்டமா- நேரத்தை வீணாக்காமல் விஷயத்தை சொல்

கோ : எங்கள் கழக ஆண்டு விழா நடைபெறப்போகிறது. தேர்தல் களத்திலே பங்கு கொண்டு மக்களுக்கு தொண்டாற்றப் போகிறோம். தாங்கள் வந்திருந்து தலைமை வகித்து வாழ்த்துக் கூறுமாறு வேண்டுகிறோம்.