56
என்னை தெரிந்து கொள்ளாதது போலவே எல்லோரிடமும் பேசவேண்டும். சிங்கார வேலரை வரச்சொல்லியிருக்கிறேன். அவர் வருவார் நான் பார்த்துக்கொள்கிறேன்.
கோ: அவர் மகள் சந்திரா நல்லூர் ஜெமீன்தாரருக்கு மணமுடிக்கப்பட்டு விதவையாகி விட்டாள்.
மா: நான் கேள்விப்பட்டேன். சந்திராவுக்கு சாம்பசிவத்தை மறுமணம் செய்து வைக்க வேண்டும். அதைத்தான் சிங்காரவேலரிடம் பேசப்போகிறேன், சரி நீ போய்வா அடிக்கடி வந்து சந்தித்து விட்டுப்போ.
கோ: வருகிறேன் துரைராஜ்.
மா: போய்வா. (கோதண்டன் போனபின்)
வெள்ளை: எசமான். சிங்காரவேல் முதலியார் வத்திருக்கிறாருங்க.
மா: வரச்சொல்.
சிங்: (வந்து) நமஸ்காரம் !
மா: வாரும் சிங்காரவேலரே வணக்கம்.
சிங்: அழைத்ததாக கேள்விப்பட்டேன். ஓடோடி வந்தேன்.
மா: டேய்! எவ்வளவு பெரிய ஆள் வந்திருக்காரு. சேர் கொண்டாந்து போடுடா. (கொண்டு வருகிறான்) டேய் இங்கேபோடு. காலை எவ்வளவு நேரம் கீழே வைத்திருப்பது? (காலைத்தூக்கி நாற்காலியில் வைத்தபடி) தங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிய பக்திமானாம்.