59
வா : கிடக்கிறான் தள்ளுங்கோ! நேக்கு அவனோட தயவு எதுக்கு?
மாயே: சிங்காரமுதலிதான் உம்ம பேச்சைத் தட்டி நடப் பதே கிடையாதாமே.
வா :ஆமாம் -- அப்படித்தான்இருந்தான். கோயில் கட்டுடான்னேன். கட்டினான். கும்பாபிஷேகம் செய்டான்னேன். செய்தான்.
மாயே: ரசவாதம் செய்ததுகூட நீர் சொல்லித்தானாம்.
வா: யார் சொன்னா அப்படி இழுத்து வாரும் இப்படி. நான் ஜோட்டாலே அடிச்சுடுவேன். நான் தலைப்பாடா அடிச்சுண்டேன். வேண்டாம்டா-போதும் உனக்கிருக்கிற சொத்து. ரசவாதம் எதுக்குன்னா--என் பேச்சைக் கேட்டானா? தன் சொத்து கோயில் சொத்து பூறாவும் பறிகொடுத்தான். நல்லவேளையாக நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டது. இல்லையானா நாறிப் போயிருக்கும் அவனோட வாழ்வு!
மாயே: அதுவும் தங்கவில்லையே பாவம். தாலி அறுத்து விட்டாளே சந்திரா.
வா: அறாமல் என்ன ஆகும்? ஆயிரத்தெட்டு ரோகம் பிடிச்சவன்.
மாயே: அப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சந்திராவைக் கொடுக்கச் சொன்னீரே!
வா: நான் சொன்னா இவன் புத்தி எங்கே போச்சுன்னேன்.
சிங்: (அலறியபடி) ஆ! அடப்பாவி-படுமோசக்காரா?(ஓடிவந்து வாஞ்சிநாதர் குரவளையைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார். மாயேந்திரன் தடுத்துக் கூறியும் பயனில்லை.)
மா: என்னய்யா கொன்றுவிட்டீர்
சிங்: (சுய நினைவு வந்து) ஆ! அய்யோ! கொலைசெய்து விட்டேனே. ஐயா! (மாயேந்திரன் காலில் விழுந்து) என்னை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
மா: கவலைப்படாதீர்.புரோகிதரைக் கொன்றுவிட்டாலும் நீர் கொலைகாரனாக வேண்டாம். திகில் வேண்டாம். நான் காப்பாற்றுகிறேன் உம்மை. முதலில் புரோகிதர் வீட்டுக்குப்போய் சில உண்மைகளைக் காட்டுகிறேன். வாரும் என்னுடன்.
—★—