6
கைகலப்பு! நான் ஒருவாரம் சிறைக்கனுப்பப்பட்டேன். நண்பன், துரைராஜ் மீது அபாண்டப் பழி சுமத்தினதால் ஊரை விட்டு மறைந்ததாக கேள்விப்பட்டு கலக்கமுற்றேன் சந்திராவின் காதல் என் மனக்கவலையைப் போக்கும் மருந்தாக பயன்பட்டது. ஏற்றத்தாழ்வு சந்திராவை ஜமீன்தாரினியாக்கி ஒரே மாதத்தில் விதவையாக்கி மகிழ்ந்தது. மாயேந்திரன் என்பவர் என் மாமாவின்— அதாவது சந்திராவின் தந்தையிடம் குடிக்கொண்டிருந்த வைதீக வெறியின் விஷத்தை அழித்து விட்டு எனக்கு திருமணம் முடித்து வைத்தார். மாயேந்திரன் தான் துரைராஜ் என்று முடிவில் தெரிந்தது. தெரிந்து என்ன பயன்? துரைராஜ்—?
சந்திரா: அன்றொரு நாள் சந்திரோதயத்தின்போது என் வீட்டுத் தோட்டத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருந்தேன். சாம்பசிவம் — ஆம், அவர் வந்து என் அழகை அப்படி(!) வர்ணித்தார். காதல் வளர்ந்தது. இடையிலே என் தந்தையின் பயங்கர நடவடிக்கைகளால் நான் ஒரு கிழ ஜமீன்தாரருக்கு மனைவியாக்கப்பட்டேன். மறு மாதம் விதவையானேன். மீண்டும் சாம்பசிவத்தை சந்தித்து புத்துலகம் அமைக்க துடித்தோம். மாயேந்திரன் எங்கள் வாழ்க்கையை இணைத்து வைத்தார்— ஆனால் அந்த கர்மவீரன்—?