பக்கம்:சபாபதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. சபாபதி (அங்கம் 1 |கோவிந்தபிள்ளை கடத்தின் மீது பலங்கொண்டு முத்தாயிப்பு கொடுக்க, கடம் உடைந்து உள்ளே யிருக்கும் உப்பும், பாலும், ஐசும அவர் மீதெல்லாம் விழுகிறது) கோபி, இதென்னவுங்க! ச. நானு அப்பவே சொல்லலே வேளும் இன்னு! ஒடஞ்சா கஷ்டமிண்னு சொல்லலே : - ச.மு. அடே! தடிக்கழுதெ! என்னடா செய்தே இதிலெ ஏண்ட இத்தையெல்லாம் ஊத்தனே ? ச. இல்லேப்பா, கானு கீழே கொண்டுபோய் ஊத்திவுட லாயிண்ணு பாத்தேன், இதுக்குள்ளே நீ அவர்கிட்ட கொடுக்கச் ச்ொன்னையா, உடனே கொடுத்துட் டேம்பா ! அதுக்குத்தான் மொதல்லேம்புடிச்சி மொள் ளமா அடிங்க மொள்ளமா இடிங்க், இண்ணு அவர் கிட்ட சொல்விகினு இருந்தேன். . ச.மு. இந்த இடியட்டே (idiot) என்ன செய்யரது பிரதர் : (brother) அப்புறம் உனக்கு செய்யவேண்டிய வேலெ செய்யரேன், இப்போ கீழே போயி, நல்ல பானையா ஒரு பானெயெ வாங்கிகினு வா (சபாபதி கீழே போகிருன்) அது வர்ரவரைக்கும் கொஞ்சம் கச்சேரியெ நிறுத்தி எங்க தமிழ் வாத்தியார் எம்பேர்லெ ஒரு சாத்துகவி பாடி யிருக்கராரு, அதெ படிப்போம்-எங்கே அவர் வரலே இன்னம் பரவாயில்லே - நரசிம்மாசாரி, நீங்க ராகத்தோட கண்ணு படிப்பைங்க - எங்கே அந்த சாத்துகவி எழுதன. காயிதம் ? - அடே சபாபதி ! இங்கே வா இப்படி, சபாபதி மறுபடி வருகிருன் எங்கேடா அந்த தமிழ் வாத்தியார் ஒரு காயிதம் வைச் சூட்டுப் போனரே இங்கே? ச. அந்த காயிதமா? இதோ கொண்டாரேம்பா (போகிருன்) ச.மு. ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டேண்ரா என்ன மானு தப்பு பண்ணிகினு இருக்கரான் ! சபாபதி மறுபடி வருகிருன் ச, இதோ அப்பா! ச.மு. அவர்கிட்ட குடு-நீங்க ராகத்தோடு படிங்க பிரதர். (brother). (சபாபதி கீழே போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/52&oldid=821730" இலிருந்து மீள்விக்கப்பட்டது