பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. வே. சபாபதி முதலியாரும், பேசும் படமும் 5 கொஞ்சம் பொறுங்க, கதையை தீர்மானித்த பிறகுதான் கஷ்டம் ஆரம்பிக்குது- அந்த கதையை நாடக பாணி யா சினிமாவுக்கு ஏற்றபடி வசனங்களே யெல்லாம் அமைத்து எழுதவல்ல ஒரு தமிழ் ஆசிரியனேத் தேட வேண்டும் - இந்த சமாச்சாரம் தெரிந்த உடனே ஊரிலிருக்கிற தமிழ் கதை எழுதத்தெரிந்த எல்லோ ரும் வந்து கம்மை பிச்சிவிடுவார்கள்-அவர்களில் தக்க ஒருவனே காம் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவனிடம் சொல்லி மேற்சொன்னபடி வசனத்தை எழுதிக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒப்பந்தம் செய்துகொண்டு அட்வான்ஸ் குடுக்கவேண்டி யது தான் தாமதம். இது வரையில் நம்மிடத்தில் தினம் தொங்கிக்கொண்டிருந்த, அவன் பின்னல் நாம் தொங்க வேண்டும். ஒருமாதத்திற்குள்ளாக எழுதித் தருகிறேன் என்று சொன்னவன் ஒரு வருஷத்திற் குள்ளாக எழுதி கொடுத்தால் கம்முடை அதிர்ஷ்டம். இதற்குள்ளாக ஏதாவது போக்கு சொல்லி தனக்கு சேர வேண்டிய பணத்தையும், அதுக்கு மேலாகவும் வாங்கிக் கொள்வான். இதற்குள்ளாக நமக்கு நாலு ஜதை செருப்பு தேய்ந்துபோகும். ச. ஏம்பா அவ்வளவு அடி தாங்குவாரா கதை எழுதற்வரு, ச. மு. அடே முட்டாள் செருப்பு தேய்ந்து போகும்றது ஒரு பழமொழி-தினம் அவர் வீட்டிற்கு போய் கேட்டுவர்ர துண்ணு அதற்கு அவ்வளவு நடக்கணும்னு அர்த்தம் நாராயணசாமிப் பிள்ளே வருகிருர் ச. மு. ஓஹோ நாராயணசாமி பிள்ளே வாங்க வாங்க என் அதிர்ஷ்டமே அதிர்ஷடம் நீங்களும் சரியான வேளேக்கி சொல்லிவச்சாப்போல வந்தீங்க உக்காருங்க-கான் ஒரு பேசும்படம் தயார்பண்ணலாம்னு யோசிக்கிறேன் அதற்காக இதிலே அதிக அனுபவசாலியான இதோ இருக்கும் ஜெகந்நாத முதலியாரை அதில் உள்ள கஷ் டத்ளை யெல்லாம் சொல்லும்படி கேட்டுக்கொண்