பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் - சைனர்

21


போல் அமைந்த நூல்களும், அவ்வாறே தொகை நூல்களாய் யாப்பின் விரிவெல்லாம் - அழகெலாம் - தோன்ற அமைந்தவையும் உரையும் பாட்டுமாகப் பழங்கதையைக் கூறுவனவும், சிறந்த கருத்தினைப் பழமை விளங்க நீளத் தொடர்ந்து கூறுவனவும் புதிய கருத்துக்களையும் கதைகளையும் கொண்டு சேரிமொழிக்கும் அல்லது திசை மொழிகளும் நிரம்ப இயைந்து வருவனவும், இசைப் பாட்டுக்களாய் அமைத்தவையும் அக்காலத்தில் வழங்கின. எனவே, குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும்போது பயன்படும் கதைகளும் விடுகதைகளும் அறத்தின் வற்புறுத்த வரும் பழமொழிகளும் கீழ்க்கணக்கு நூல் போன்றவையும் புராணக் கதைகளும் அந்நாளில் வழங்கின எனலாம். இவற்றை எல்லாம் பார்க்கும்போது இங்கும் சமணர் முதலியோரது ஆக்கத்தின் அறிகுறியினைக் காணலாம்.