பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் - காலம்

27


பதஞ்சலி

(அ) தொகைப் பொருள் : அலை தாம் முன் மொழி நிலைய ஓடம் என வரும் சூத்திரமி பதஞ்சலி கூறியதனை மொழிபெயர்த்ததே என்பர் சிலர். மொழிபெயர்ப் பானுல் பதஞ்சலி கூறிய முறையில் அமையாது வேறு வகையில் தொல்காப்பியம் ஏன் அமைந்தது என்பது விளங்கவில்லை. வைப்பு முறையிலும் சிறப்புப் பொருள் காண்பதே பதநீசவி மரபினர் வழக்கு என்பதனை இங்கு மனத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். பதஞ்சலி காலத்துக்கும் முற்பட்டது. அன்றிப் பிற்பட்டதாகாது இக்கொள்கை என்பதொன்தே இங்குக் கூறக்கூடும்.

(ஆ) இலக்கணம்: இலக்கண மென்பது வீசாகர ணம் என்ற பொருளில் தமிழில் பெருவழக்காக வழங்கு கிறது. இந்த வழக்கு இந்திய நாடு முழுதும் ஒரு காலத்தே வழங்கியதாதல் வேண்டும். பதஞ்சலி இரண்டோரிடத்தே இதனைக் குறித்தலால் இந்த வழக்கு அவர் காலத்துக்கும் முந்தியதா தம் வேண்டும். ' வரருசி என்ற காத்தியா னரும் லஷ்ய வஷ்ணே வியாகரண எனக் கூறுவதால் அவருக்கும் முன்னையதாதல் வேண்டும். அவர் காலத் தில் பொருள் விளங்காமையால் அன்றே இலக்கணம் என்றல் வியாகரம் எந்த பொருள் காதின்மம், இவ்வளவும் கூறியதால் தொல்காப்பியச் சூத்திரங்கள் பதஞ்சலிக்கு முற்பட்ட கொள்கைகளைக் கூறுவன என்று கொள்வ தன்றிப் பிற்பட்டன என்று ஒருதலையாக எல் காது கூறமுடியும்?

மனு பரதர் - கவுடல்யர் :

(அ) பொது: மனுஸ்மிருதி, கவுடல்ய அர்த்த சாஸ்திரம், பரதரது நாட்டிய சாஸ்திரம் என்ற இவற்றி னெதிரொலிகள் தொல்காப்பியத்தில் உள்ளனவாம். இந்த நூல்கள் பழங்காலத்திலிருந்து வளர்ந்துவந்து