பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சங்க நூல்கள்

சங்கங்கள் :

தொல்காப்பியம் பழைய இலக்கணமானால், தமிழில் பழைய இலக்கியம் சங்க நூல்கள் என்பவையே ஆம். இவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற தொகை நூல்களாகும். இலை தனிப்பாடல்களின் தொகுப்பே ஆம். சங்கமாகத் தமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழாராய்ந்து பாடிஞர்களாம். மூன்று சங்கங்கள் இருந்தனவாம். முதலாம் சங்கம் இந்தியப் பெருங்கடலில் இருந்த தென் மதுரையில் இருந்ததாம். வான்மீகி புனைத்துரைக்கும் சுபாடத்தோடு விளங்கியதாகிய நகரமே இரண்டாம் சங்கம் வீற்றிருந்த சுபாடபுரமாம். இதுவும் கடலால் அழித்தபோது மூன்றும் சங்கம் இப்போதுள்ள மதுரை வில் விளங்கியதாம், கடைச் சங்கம் நீங்கலானவை புராணக் கதைகளின் காலத்தவை எனலாம். ஆதலின், அவற்றைப்பற்றி ஒன்றும் கூறுவதற்கு இல்லை. தொல் காப்பியம் இடைச்சங்க காலத்தது என்பது கர்ணபரம் பரை. நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் அதங் கோட்டாசான் தலைமையில் அரங்கேறியதாம் இது. தொல்காப்பியர், அகத்தியரது மாணக்கர் என்பர். ஆனால், தொல்காப்பியத்திற்கு முந்தியது என்று வரையறுத்துக் கூறும் வகையில் அகத்தியர் பா என ஒன்றும் கிட்ட இலக. இன்று கிடைக்கும் சங்கப் பாக்கள் பெரும்பான் மையும் கடைச்சங்க காலத்தன. ஒரு சில முற்சங்கத்தின என்று சிலர் கூறினாலும் எல்லாரும் ஒப்புவ தில்லை.