பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழியியல் (Linguistics) துறையிலும் வல்தைராய் அண் ஹாமலைப் பல்கலைக் கழகத்தில் அத்துறைக்குத் தலைமை தாங்கி அதனையும் சிறப்புற வளர்த்து வருகிறார். கல்லூரியில் எல்லாப் பாடங்களையும் நம் தாய் மொழி வாயிலாகப் பயில்வதே கவ்வி வளர்ச்சிக்குரிய சிறந்த வழி என்பதை நன்குணர்த்து, அவர் கல்லூரித் தமிழ்க் குழுவில் உறுப்பினர் பொறுப்பேற்றுப் பி. ஏ. பட்ட வகுப்புப் பாடங்களைத் தற்போது தமிழில் கற் பிக்க வழி வகுத்துள்ளார். அவர் தமிழ்மொழிக்கே யன்றித் தமிழ் நாட்டுக் கும் பணி பல புரித்துள்ளார். நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுச் செய்த தியாகங்களை நம் நாடு அறியும். இப்பெருத்தகையார்க்கு 1961-ஆம் ஆண்டு சன வரி மாதத்தோடு அறுபது ஆண்டு நிறைவெய்துகிறது. அவர்தம் மணிவிழா நினைவாற்றலாக அவர் இயற்றிய நூல்கள் சிலவற்றை வெளியிடும் பணியைக் கணக்கதிர் ஏற்றுள்ளது. அவற்றுள் ஒன்றே இந்நூல். சங்ககாலத்தி விருந்தே சமணர்கள் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங் களும் எழுதித் தமிழைச் சிறந்த முறையில் வளர்த்துன் வார்கள். அவர்கள் ஆக்கிய இலக்கண இலக்கியங்களை முறைப்பட மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகின்றது. திரு. தெ. பொ. மீ. அவர்களின் தமிழ் இயக்கள் இயக் கியங்களைப் பற்றிய ஆழ்த்த புலமையையும் இந்நூல் புலப்படுத்துகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்தூல் பெருத் துணை செய்வதாகும். நந்தமிழ் மொழி ஆக்கம் பெறத் திரு.தெ.பொ.மீ. அவர்கள் நீடுவாழ வேண்டுமென எல்லாம் வல்ல திரு வருளை இறைஞ்சுகிறேன். ஜி. ஆர். தாமோதரன்