பக்கம்:சமணமும் தமிழும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 93 உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவன் பிதரிடமுன்ன இக்குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமணசமய சாத்திரம் கூறுகின்றது, ஆகவே, முப்புரம் எரித்த கதையில் இரண்டுசமயத் துக்கும் ஒற்றுமையுள்ளது போலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக்கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது. ஐயனார் : ஐயனார், சாஸ்தா அரிகரபுத்திரன் எனும் பெயர்களையுடைய தெய்வம் பர்த் தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படசேன் நது, இந்தத் தெய்வம் பெனத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்துமதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து சாஸ்தா' என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்லா மரத்தக்கொண்டார்கள் என்பதைப் பெனந்தமும் தமிழும்' என்னும் எமது நூலிற் காண்க, சமண சமயத்தி லிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர் களுனடப கோவில்களில் இத் தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றுகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின் தனர். இத் தெய்வத்திற்கு பிரம்ம யட்சன்' சாத்தனார்' முதலிய பெயர்களை அவர்கன் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜின காஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்ட போது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படு வதைக்கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத் திருக்கோயில்களுக்குச் சென் தபோதும் அங்கும் இத் தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக் களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.