பக்கம்:சமணமும் தமிழும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 105 தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறு கின்றது. இக்கோயிலிலுள்ள குரரமாத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுன்னது. "தன்னாவிற் குன் துயராது தண்காஞ்சி முன் ஜாதி மும்முனிவர் மூழ்கியது --மன்னவன் தன் செங்கோல் கலக்காட்டும் தென்பருத்திக் குன் றமர்ந்த கொல்லார் தருமர் குரா.' இக்கோயிலைப் பற்றி நன்கறிய விரும்புவோர் அரசாங்கத் தார் வெளியிட்டுள்ள ஆங்கில நூலிற் கண்டுகொள்க.' சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பல்விச்சந்தம் சிலம் பதப்படுகிறது. இத்தா ஓகா திரு அலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குவிப் பிக்கிறது. இது கேமிகாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாதுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமாஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாறுகாவில் அமணம்பாக்கம் உள்ளன. இவை இக்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன. புழல் : சென்னைக்கு வடமேற்கே 9-மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு, இங்கு சிஷப தேவருக்கு (ஆதிகாதபகலா ஓக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் விதாமம் பண்டைக்காலத்தில் சமணச் கிராமமாக இருந்திருக்கவேண்டும், தமிழ்நாட்டுச்சித்ப முறையில் அகமத் திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பாடிதாய்விட்ட படியால், சென்னையிலுள்ள சில வடகாட்டுச் சமணர் இக் கோயிலை வடநாட்டுச் சிற்பமுறையில் புதிப்பித்துள்ளனர். 1. SI, I, Vol. VII No. 3419. 2, Tiruparuttik-Kunram and its Temples by T. N. Kanichandran. 3. 338 of 1908. 4. S. I, I. Ved. VII. No. 540.