பக்கம்:சமணமும் தமிழும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயம் தோன்றிய வரலாறு

3


தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைதச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவவிரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன:

முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.

இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

தீர்த்தங்கர‍ர் பெயர் உயரம் ஆயுள்
பெயர் உயரம் ஆயுள்
1. விருஷபர் 500-வில் 84-லக்ஷ பூர்வ ஆண்டு
2. அஜிதநாதர் 450-வில் 72-லக்ஷ பூர்வ ஆண்டு
3. சம்பவநாதர் 400-வில் 60-லக்ஷ பூர்வ ஆண்டு
4. அபிநந்தனர் 350-வில் 50-லக்ஷ பூர்வ ஆண்டு
5. சுமதிநாதர் 300-வில் 40-லக்ஷ பூர்வ ஆண்டு
6. பதுமநாபர் 250-வில் 30-லக்ஷ பூர்வ ஆண்டு
7. சுபார்சுவநாதர் 200-வில் 20-லக்ஷ பூர்வ ஆண்டு