பக்கம்:சமணமும் தமிழும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சமணமும் தமிழும் புலிவல்லம் : திருச்சி தாலுகா திருப்பாலத் துறை தாருகவனேஸ்லார் கோயிலில் உள்ள சாசனங்களில், * புலிவல்லத்து மனரிடைப் பன்னிச்சந்தம்' கூறப்படுகிறது.' இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும். அமண்குடி : திருச்சி தாலுக்கா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பரகேசரிவன்மரது 16-0த ஆண்டில் எழுதப்பட் டது, இதில், அமண்குடி. குறிக்கப்பட்டுள்ளது' ஷ அரசனது 23-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் * உறையூர் சுற்றத்து அமண்குடி, ' யைக் கூறுகின்றது." இப்பெயரினால் இன்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே . பழைய சங்கடம் : குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி, இங்கு சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன. இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர். சீயாலம் : குளித்தலை தாலுகா சியாலத்தில் 'சண் டக்சாபாறை' என்னும் குன்றில், சமண முனிவர் இருந்த தற்குச் சான்றுகள் உள்ளன. தத்தாலம் : தென்காசி தாலுகாவில் உள்ள குத்தா லம் என்னும் இடத்தில் 'பாதேசிப் பொடவு' என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத் தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. 1. S. I. I (Torts). Vol. VIII. Naa, thi7 und 572. 2. S.I. I. (Taxts). Vol. VIII, No. 1109. 3. do do No. 532. 4. Trichinopoly gazetteer Val I. P. 232. 5. Top. Ias. Vol III. N 132, 6. Ep. Rap. 1912. P. 57. Top. Ins. Vol. III. No, 389.