பக்கம்:சமணமும் தமிழும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 129 வீரப்பட்டி : திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக் குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக் கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது.' ஜம்புகேஸ்வரம் : திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்யூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரி வர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், 'கவிராஜப் பெரும்பள்ளி,' என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது.* திருமலைவாடி : இங்குச் குந்தவைப் பிசட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது, (s. 1. I. Vol. 1. 67&68.) இந்த அரசியார் வட ஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத் திலும் சமணக் கோவில்களைக் கட்டியுள்ளார். பெரியம்மா பாளையம் : பெரம்பலூர் தாலுகா பெரம் பலூருக்கு வடகிழக்கே 14 மைல், இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூடுண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன.' - அம்பாபுரம் : இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாகாயம் தாலுகாவில், உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இக்குச் சில சமண உருவங்கள் இருக்கின் நன.. ஜயங்கொண்ட சோழபுரம் : உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருவங்கன் 1. Aa, Rap. Arah, Dart. S. Cirals. 1900-10, P, 19. 2, 32 of 1937-38. 3. Top. List, P. 2613, 4. Top. Llt. P. 264. + -9