பக்கம்:சமணமும் தமிழும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமனத் திருப்பதிகள் 139 கவிர....பள்ளியுடைய கனகசேளபடாரர் கையால் யான் கொண்டு கடவ." மற்ருெரு சாசனம், 'தங்கை ஒளி மாதியார் தாயார் தக்க நீலி' என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் தற்தூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்தனதப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டித் தாலுகா வில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சரர் கோயிலின் மண்ட பத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் Ill-உடைய 11-வது ஆண்டில் (கி. பி. 1227. மே. 15). எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த "பள்ளிச் சந்தம்,' குறிக்கப்பட்டுள்ளது. இதனால், இவ் ஆருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயி லூக் குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்க வேண்டும். திருநாகேச்சுரம் : கும்பகோணம் தாலுவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்கணில் உள்ள சாசனம், தென்கரைத் திரைமூர் நாட்டில்,' இருந்த Ber முடையார் பன்றி,' என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடு கிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட. அரசனால் கட்டப்பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடித்து கிடந்த தென்றும், அக் கோயிற் கற்களைக்கொண்டு இப்போ தின்ன திருநாகேச்சுரத்துச் சைவக் கோயில் கட்டப்பட்ட தென்றும் இல் ஆசார் கூறுவர். அம்மன் கோயில் மண்ட பத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப் படுகின்றன. இலை, இவ்வூரார் கூறுவதை உறுதிப்படுத்து "கின்றன. இவ்வருக்கு அருகில் உன்ன வயல்களில் சமண 1, Top, Ins. Vol ii. (1243). S.1, 1, (Toxil) Val VI. No. 413. 2. 3. I, I. (Taris) Vol VI. No. 412, 3. Topy, Ini. Vol II. (1527. 466 of 1912).