பக்கம்:சமணமும் தமிழும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 157 காரின் உருவம் பாதையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவத்தின் கிழ் வட்டெழுத்துச் சாசனம் பொறிக் சுப்பட்டுன்னது, இந்த எழுத்து கி. பி. 10-ஆம் நூற் முண்டில் எழுதப்பட்டது. குகையின் உள்ளே அரை வட்டமாகக் கரைமேல் அமைந்துள்ள பாறையில் தனித் தனியாக அமைந்த ஐந்து உருவங்கள் செதுக்கப்பட் இளமான, முதல் உருவம் கான்கு கைகளை யுடைய யட்சி உருவம். சிங்கத்தின் மேல் அமர்ந்து ஒரு கையில் வில்லை யும் மற்றொரு கையில் அம்பையும் ஏனைய கைகளில் வேத அயுகங்களையும் பிடித்திருக்கிறது. இந்த பட்சிக்கு எதிரில் யானையின் மேல் அமர்ந்துள்ள ஆண் உருவம் கையில் வானயும் கேடயத்தையும் பிடித்திருக்கிறது. இது சாஸ்தா உருவம்போலும். இதையடுத்துத் தனித்தனியே மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முச்குடைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இருந்த திருமேனிகள், கடைசியாகப் பதுமாவதி என்னும் இயக்கியின் உருவம், வலது காலத் தொங்கவிட்டு இடதுகாலை மடக்கி சுகாசனத்தில் அமர்க் திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்தி சிற்பங்களில் கடுவில் உள்ள மூன்று தீர்த்தங்கரரின் உரு வங்களுக்குக் கீழே மூன்று வட்டெழுத்துச் சாசனங்கள் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டுள்ளன. செட்டிப்பொடவுக்குக் கிழக்கே சமணமலையில் பேச் சிப்பள்ளம் என்னும் இடம் இருக்கிறது, இது குன்றின் மேல் இருக்கிறது. இக்கு வரிசையாகப் பாறையில் சமண தீர்த்தங்கர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்களின் கீழே வட்டெழுத்துச் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை கி. பி. 8 அல்லது 9-ஆம் காற்றாண்டில் எழுதப்பட்டவை. பேச்சிப்புள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்துபோன ஒரு கோயில் காணப்படுகிறது. இக் கோயிலின் தரையமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளன. இங்கு 10-ஆம் நற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப்பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு,